Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்பியன்ஸ் டிராஃபி : PAKvsBAN போட்டி மழையால் ரத்து!

சாம்பியன்ஸ் டிராஃபியில் இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான், வங்க தேசம் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
05:21 PM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. தற்போது வரை 8 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. குரூப் பி-யில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கின்றன.

Advertisement

இந்த நிலையில், அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்ட நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தன. ஆனால் பாகிஸ்தானில் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் எற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து அளிக்கப்பட்டது. ஒரு வெற்றிகூட இல்லாமல் வங்கதேசம் மூன்றாவது இடத்தையும், பாகிஸ்தான் அணி4-வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Champions Trophy 2025CricketMatch CancelPAKvsBAN
Advertisement
Next Article