ராஜஸ்தானுக்கு சவால்... டெல்லி அணி 188 ரன்கள் குவிப்பு!
ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 49 ரன்களும், கேஎல் ராகுல் 38 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மகீஷ் தீக்ஷனா, ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
டெல்லி அணி இதுவரை விளையாடி உள்ள 5 போட்டிகளில் 4-ல் வெற்றிப் பெற்று, கடைசி போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடி உள்ள 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை தழுவி உள்ளது.