Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!" -  #CMMohanYadav அறிவிப்பு!

03:59 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான விவாதங்களுக்கு நகர்ப்புறங்களில் மையங்கள் திறக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியானது, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளை (ஆகஸ்ட் 26) கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கடவுள் கிருஷ்ணர் குறித்த கருத்தரங்கு கீதா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தன்னார்வ அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் கீதா பவன் நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தூரில் உள்ள கீதா பவன் கிருஷ்ணரின் பல்வேறு அம்சங்கள் குறித்த உரையாடலுக்கான ஒரு பெரிய மையமாகத் திகழ்கிறது. கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான அம்சங்களை விவாதிக்கவும், விவாதங்களுக்கு  வாய்ப்பளிக்கும் விதமாகவும் நகர்ப்புறங்களில் கீதா பவனைப் போல பல மையங்களை எங்களின் அரசு திறக்கும் என அறிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், இந்த மையங்களுக்கு மாநில அரசு நிதி வழங்கும் எனவும், இந்த மையங்கள் புராணங்கள் குறித்த அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

Tags :
JanmashtamikrishnaLord KrishnaMadhya pradeshMohan Yadav
Advertisement
Next Article