Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை” - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

05:03 PM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்கம் மாநில ரயில் விபத்து குறித்து, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் மீது மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு சாட்டியுள்ளார்.

Advertisement

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சரக்கு ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு வந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கவனத்தில் கொள்வதில்லை எனவும், ரயில்வே துறை அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும், அதனால் தான் பெரும் பாதிப்புகளை ரயில்வே துறை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தான் முழுக்க முழுக்க ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பக்கம் இருப்பதாக தெரிவித்த மம்தா பானர்ஜி, கூடுமானவரை ரயில்வே ஊழியர்கள் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். மத்திய அரசை பொறுத்தவரை தேர்தல் மட்டும் தான் அவர்களுக்கு மிக முக்கியம் எனவும், எப்படி எல்லாம் தேர்தலை முறைகேடாக நடத்த வேண்டும் அதன் மூலமாக தேர்தல் முறையை கைப்பற்ற வேண்டும் போன்றவற்றை மட்டும் தான் மத்திய அரசு சிந்திப்பதாக மம்தா தெரிவித்தார்.

அவர்கள் தேவையில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை விட நிர்வாகம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Tags :
Ashwini VaishnawDarjeelingIndian RailwaysKanchenjunga ExpressMamata BanarjiNews7Tamilnews7TamilUpdatesRangapanitrain accidentWest bengal
Advertisement
Next Article