Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது - #HightCourt மதுரைக் கிளை கருத்து!

04:53 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Advertisement

திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..

நான் நிறுவனம் நடத்த திருச்சி கனரா வங்கியில் சுமார் 1.7 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தேன். இந்நிலையில் கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி எனது சொத்துக்களை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்து நாளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் ” என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதே போல் உயர்நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு உட்பட்ட மாவட்டங்களில்
வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், தங்களது வாகனம், வீடு, சொத்துக்கள்
போன்றவற்றை ஏலம் விடுவதாக அறிவித்து வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து
செய்யக் கோரும் மனுக்கள் ஏற்கெனவே கிடப்பில் இருந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு முன்பாக விசாரணைக்காக
இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் (DRT) சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் பல வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில், மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று
நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என கூறப்படுவதாக தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், " சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களிலும் கடன் வசூல்
தீர்ப்பாயங்கள் உள்ளன. ஆனால் 3 தீர்ப்பாயங்களும் முறையாக செயல்படுவதாக
தெரியவில்லை. மதுரையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் வசூல் தீர்ப்பாய
அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தற்போது விடுமுறையில் இருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. கோவையில், வசூல் தீர்ப்பாய அதிகாரி பணியிடம் காலியாக
உள்ள நிலையில், மதுரை அதிகாரியும் விடுப்பில் சென்று இருப்பதால், மனுதாரர்களை
கேரளா எர்ணாகுளம் செல்லுமாறு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசின் இந்த
செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது.

மத்திய அரசு கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள்
நாங்களே வழக்குகளை நடத்திக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். கடன் தீர்ப்பாயம் நிலை குறித்து மத்திய நிதித்துறை அமைச்சரின் கவனத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும்" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீதிபதிகள் கூறும் கருத்துக்களை உடனடியாக ஊடகங்கள் வெளியிட்டு விடுகின்றன" என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், " ஊடகங்களில் செய்திகள் வெளியானால் என்ன? அப்படியாவது தீர்வு
காணப்படுமா? என பார்ப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மதுரை, கோவை கடன் வசூல் தீர்ப்பாயங்கள் முறையாக செயல்படுவது குறித்து மத்திய அரசு தரப்பிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டனர். மேலும் திருச்சி தனியார் நிறுவனத்திற்கு கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Debt Recovery TribunalsFinance MinistryHigh courtMadurai High Court
Advertisement
Next Article