Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு - குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!

07:26 AM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

Advertisement

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன்,  இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. ஆனாலும் முழுமையாக மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

இந்த சூழலில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் போரோபேக்ரா பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகளுக்கு தீயிட்டு எரிப்பது போன்ற நடவடிகைகளில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டதாகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை முகாம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் 11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குகி-சோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலைப்பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் புதிய வன்முறை சம்பவங்கள் பல நிகழ்த்தப்படுவதாகவும், ஆயுதம் ஏந்திய குழுக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களை விரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அஸ்ஸாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப் மற்றும் போலீசார் அடங்கிய படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இம்பால் உள்பட பல்வேறு இடங்களில் மோதல்கள் நடப்பதாகவும், போலீஸார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவும் பல இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மணிப்பூர் தொடர் வன்முறைகளால் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது. 

மணிப்பூரின் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 70 கம்பெனி துணை ராணுவப் படைகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளார். மேலும் அம்மாநில ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் என்.பிரேன் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளத்தாக்கின் ஆறு காவல் நிலையப் பகுதிகளில் " AFSPA " சட்டம் அமல்படுத்தப்பட்டதை மறுஆய்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் நவம்பர் 11ம் தேதி ஜிரிபாமில் நடைபெற்ற கொலைக்கு நீதி வேண்டி குக்கி போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏழு நாட்களுக்குள் அவர்களை "சட்டவிரோத அமைப்பாக" அறிவிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
Manipurmanipur videoManipur violence
Advertisement
Next Article