Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!

05:05 PM May 15, 2024 IST | Web Editor
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமைக்கான சான்றிதழை மத்திய அரசு முதன்முதலாக இன்று வழங்கியுள்ளது. 

Advertisement

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இதற்கு 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.  இந்தச் சட்டமானது வங்கதேசம்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014,  டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.  அதாவது ஹிந்து,  கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள்,  சமணர்கள்,  பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இஸ்லாமியர்கள் மட்டும் விடுபடுவதை எதிர்த்து 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.  டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது.  இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மார்.11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வழங்கியது.  குடியுரிமை திருத்த சட்ட அமலுக்கு முதல் குடியுரிமை சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இந்த சான்றிதழ்களை வழங்கினார்.  விண்ணப்பதாரர்களை வாழ்த்தி குடியுரிமை சான்றிதழ்க்கான அம்சங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Advertisement
Next Article