Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

156 மாத்திரைகளுக்கு தடை விதித்த ( #FDC ) மத்திய அரசு | ஏன் தெரியுமா?

12:50 PM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

சளி, ஒவ்வாமை, காய்ச்சல் மற்றும் உடல் வலிக்காக பயன்படுத்தப்படும்  156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

Advertisement

 

பக்க விளைவுகளையும் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும் சில மருந்துகளுக்கு அவ்வப்போது மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே அடியாக 156 காக்டெய்ல் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் முடி வளர்ச்சி, தோல் பராமரிப்பு மற்றும் வலி நிவாரணம், மல்டிவைட்டமின்கள், ஆன்டி-பராசிடிக்ஸ், ஆன்டிஅலெர்ஜி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அடங்கும்.

நிலையான டோஸ் கலவைகள் ஒரு மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை இணைக்கும் மருந்துகள் "காக்டெய்ல்" மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் இந்த வகையான 156 மருந்துகள் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, டோரண்ட், சன் பார்மா, ஐபிசிஏ லேப்ஸ் மற்றும் லூபின் ஆகியவை மத்திய அரசின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த 156 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, எஃப்.டி.சி மருந்தைப் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

உயர்மட்ட குழு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமும் (DTAB) இந்த கலவைகளை ஆய்வு செய்து இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 இன் பிரிவு 26 A இன் கீழ், இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை தடை செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டிபயாடிக் அசித்ரோமைசின் மற்றும் அடாபலீன் ஆகியவற்றின் கலவையானது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலி நிவாரண மருந்துகளின் பிரபலமான ஒன்றான "Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 'Aceclofenac 50mg Paracetamol 125mg tablet', Mefenamic Acid Paracetamol Injection, Cetirizine HCl Paracetamol Phenylephrine HCl, Levocetirizine Phenylephrine HCl Paracetamol, Paracetamol Chlorpheniramine Maleate Phenyl Propanolamine, and Camylofin Dihydrochloride 25 mg Paracetamol 300mg உள்பட 156 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராசிட்டமால் (Paracetamol), டிராமடோல்( Tramadol), ஃடவ்ரின் (Taurine) மற்றும் கஃபைன் (Caffeine) உள்ளிட்டவற்றின் கலவையில் உள்ள மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
FDCHealthHealth ministryIndialife styleMedicalmedicine
Advertisement
Next Article