Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

6வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு..?

07:23 PM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் 6பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 5% - 10% பங்குகளை விற்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.  பொதுத் துறையில் தற்போது 80%க்கும் அதிகமான பங்குகளை இந்திய அரசு வைத்திருக்கிறது.  அதிலும் குறிப்பாக ஆறு பொதுத்துறை வங்கிகளில் அரசாங்க உடைமை 80% அதிகமாக உள்ளது.


6 வங்கிகள் பின்வருமாறு ..

1. பாங்க் ஆஃப் இந்தியா

2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

3.பஞ்சாப் & சிந்து வங்கி

4. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா

5. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

6. UCO வங்கி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த  பிப்ரவரி 2021 ஆண்டு பட்ஜெட் உரையில் அரசாங்கத்தின் பங்கு விலக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2021 இல், நிதி ஆயோக் இரண்டு அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து முதலீட்டுத் துறைக்கு பரிந்துரைத்தது.

இதன்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை தனியார்மயமாக்குவதற்கு பட்டியலிடப்பட்டது. ஆனால்  இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது 6 வங்கிகளின் பங்குகளை தற்போது விற்க முடிவு செய்துள்ளது.

Tags :
BankNirmala sitharamanPrivatisationPublic Sector BanksshareStack Holds
Advertisement
Next Article