Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
09:47 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மண்டலங்களுக்கு குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், 466 கி.மீ. நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ. ஆணைய பகுதிகளில் வருகிறது.
ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

Tags :
Chennaigas pipelineMoEFCC
Advertisement
Next Article