“ஆரோமலே” படத்திற்கு “யு/ஏ” சன்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் தற்போது சாரங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள `ஆரோமலே’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கிஷன் தாஸ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் நடித்துள்ளார்.
இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 7ல் வெளியாக உள்ளது
ஆரோமலே’ படத்திலிருந்து இதுவரை வெளிவந்த ‘டண்டணக்கா லைப்’, “எப்படி வந்தாயோ”, “மன்னாரு வந்தாரு” ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அண்மையில் வெளியாகிய இப்படத்தின் ‘டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தணிக்கை வாரியமானது ‘ஆரோமலே’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.