Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Kerala-வில் பயங்கர விபத்து - 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

09:26 AM Dec 13, 2024 IST | Web Editor
Advertisement

பாலக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் இர்ஃபானா, ஆயிஷா, ரீதா, மித்தா ஆகியோர் 8ம் வகுப்பு பயின்று வந்தனர். மாணவிகள் நால்வரும் தேர்வு எழுதி முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிக்கு சென்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் கோழிக்கோடு சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த சிமெண்ட் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மாணவிகள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த மற்றொரு மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிமெண்ட் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதனிடையே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று உறுதி அளித்தார். மேலும் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
AccidentDeadKeralalorryaccidentpaalakaduSchoolstudents
Advertisement
Next Article