Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வர்த்தக ரகசியங்களை திருடியதாக #Infosys மீது காக்னிஸன்ட் வழக்கு!

10:43 AM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

Advertisement

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிஸன்ட் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோவின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு மென்பொருள் தொடர்பான தகவலை சட்டவிரோதமாக இன்ஃபோசிஸ் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்று தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகியான ராஜேஷ் வாரியர், காக்னிஸன்ட் நிறுவனத்தின் இந்திய கிளைத் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : வலுக்கும் பாலியல் குற்றச்சாட்டு - மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் #ActorSiddique!

காக்னிஸன்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ரவிகுமார், 20 ஆண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் வரை, இன்ஃபோசிஸ் தலைவராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில், இன்ஃபோசிஸ் மீது காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
cognizantInfosysstealingtrade secretsUS court
Advertisement
Next Article