Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
12:38 PM May 13, 2025 IST | Web Editor
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
Advertisement

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இதனால், சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு!

பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வர நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில், 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 97.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1.15 லட்சம் மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.  24,000 மாணாக்கர்கள் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறியலாம். மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
12th ResultsCBSECBSE ResultsCBSE Results 2025news7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article