Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு போலி வருகை பதிவை மேற்கொண்ட பள்ளிகளுக்கு செக் வைத்த #CBSE!

09:27 PM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு போலி வருகை பதிவை மேற்கொண்ட பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது.

Advertisement

ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி 27 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மாணாக்கரின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புகளுக்கு செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு சென்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பள்ளிகளுக்குச் செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளதை ஆதரித்த பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான், டெல்லியில் 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) திரும்பப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கை இன்று(நவ.6) எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக இருந்த 6 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் கேட்டு மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு மாதத்துக்குள் விளக்கமளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
CBSEDelhdowngradeddummyinspectionsissues noticeKotanews7 tamilRajasthansecondary levelsenior secondarystudentswithdraws Affiliation
Advertisement
Next Article