நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தமிழில் சண்டக்கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், பல வருட காத்திருப்புக்கு பின் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : திருச்சியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற தங்கை உள்ளார். ஐஸ்வர்யாவுக்கும் நகைக்கடை அதிபர் உம்மிடி உதய்குமார்- உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகனான உம்மிடி கிரிட்டிஸ்க்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கிரிட்டிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.