Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“#CBFC விரைந்து முடிவெடுக்க வேண்டும்” - எமர்ஜென்சி வெளியீடு தாமதம் குறித்து கங்கனா வேதனை!

11:28 AM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement

“எமர்ஜென்சி திரைப்படம் சீக்கிரம் வெளியாவதை திரைப்பட தணிக்கை வாரியம் உறுதி செய்ய வேண்டும்” என கங்கனா ரனாவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமர்ஜென்சி’. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசர நிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். கங்கனாவே இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அனுபம் கெர், மஹிமா சௌத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மறைந்த சதீஷ் கௌஷிக் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் மணிகர்னிகா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளனர்.

இப்படம் கடந்த செப்.6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் தணிக்கை பிரச்னையால் தற்போது வரை வெளியாகவில்லை. பத்மாவத், உத்தா பஞ்சாப் போன்ற படங்களுக்கு திரைத்துறை ஆதரவு அளித்தது போல் எனது படத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள், ஆளும் அரசு என யாருமே ஆதரவு அளிக்கவில்லை என முன்னரே கங்கனா தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் தனக்கு திரைத்துறையில் இருந்து எந்த ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

திரைத்துறையில் இருந்து எந்தவொரு ஆதரவும், ஊக்கமும் இன்றி இந்த படத்தை தயாரித்துள்ளேன். மற்ற இணை நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன். படம் வெளியிட தாமதமாவதால் அனைவரும் நஷ்டமடைந்து வருகிறோம். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அழைக்கிறார்கள். படம் சீக்கிரம் வெளியாவதை தணிக்கை வாரியம் உறுதிசெய்ய வேண்டும்” என கங்கனா தெரிவித்துள்ளார்.

Tags :
Central Board of Film CertificationemergencyKangana Ranaut
Advertisement
Next Article