டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு!
ஆந்திராவில் டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990-களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.
இதன்படி, பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14% முற்படுத்தப்பட்டோர் 15.52% தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%. பழங்குடி இன மக்கள் 1.69%. இவ்வாறு பீகார் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பீகாரை தொடர்ந்து, ஆந்திர மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் பீகார் அரசு பின்பற்றிய நடைமுறையும் ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள நடைமுறையிலும் வித்தியாசம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.