Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு - ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

03:35 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement
மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில்,  மசூதியை ஆய்வு செய்ய நியமித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார் என்பது நம்பிக்கை.  அந்த பகுதியில் கிருஷ்ணர் கோயில் உள்ளது.  அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இதுகுறித்து மதுரா நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த மனுவை விசாரித்த மதுரா கோர்ட்டு ஷாஹி ஈத்கா மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வகையில்,  இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.   அந்த மனுவில், 'மசூதி வளாகத்துக்குள் ஹிந்து கோயில்களில் அமைந்திருப்பது போன்ற தாமரை வடிவ தூண் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: தங்கம் விலை சரிவு… இன்றைய விலை நிலவரம்!

மேலும்,  சேஷநாக உருவச் சிலை,  ஹிந்து மத குறியீடுகள் மற்றும் வேலைப்பாடுகளும் தூணின் அடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கிருஷ்ணர் கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

ஆய்வை மேற்பார்வையிட ஆணையராக வக்கீல் ஒருவரை நியமிக்கவும் ஒப்புக் கொண்டது.  தொல்லியல் ஆய்வின் நடைமுறைகள் குறித்து வருகிற 18-ந் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின் போது விவாதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.   அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மசூதியின் அறக்கட்டளை நிர்வாக குழு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்ய அனுமதித்த அலகாபாத் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்து அமைப்புகள் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Allahabad CourtIndiaMathuranews7 tamilNews7 Tamil UpdatesShahi Idgah MosqueSupreme court
Advertisement
Next Article