டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!
டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின் முதலமைச்சராக ரேகா குப்தா செயலாற்றி வருகிறார். முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவடையாதது, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆலோசகர் மற்றும் கட்டிடக் கலைஞர் நியமிக்கப்பட்டதால் செலவு அதிகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படியுங்கள் : புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!
இந்த நிலையில் அதிக செலவில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக டெல்லியின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது. இதற்கிடையே, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஜாமினில் வந்தது குறிப்பிடத்தக்கது.