Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பரங்கிமலையில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு - டிச.27-ல் தீர்ப்பு!

09:00 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கபடும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷும் காதலித்த நிலையில், சத்யபிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சத்யபிரியா சதீஸுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022 அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் ஜாமின் கிடைக்காததால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஸ்ரீ தேவி தெரிவித்துள்ளார்.

Tags :
Chennai Womens CourtjudgementSathyapriya Murder Case
Advertisement
Next Article