Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ElectoralBonds மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார் - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

11:14 AM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் நிதி திரட்டியதாகவும், இவற்றில் பெரும்பாலான நிதியை மிரட்டி வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது என ரத்து செய்யப்பட்டது. கடந்த 20218ஆம் ஆண்டு இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியது குறிப்பிடதக்கது.

Tags :
caseElectoral BondsNirmala sitharamanunion minister
Advertisement
Next Article