Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப் கார் விபத்து - 6 பேர் பலி!

குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப்வே கம்பி அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
08:19 PM Sep 06, 2025 IST | Web Editor
குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப்வே கம்பி அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement

குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவகத் மலையில் மகாகாளி கோயில் உள்ளது. இந்த கோயில் பூமியிலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு சென்று வர பக்தர்கள் சுமார் 2,000 படிகள் ஏறி செல்வர். மற்றொரு வழியாக ரோப்காரும் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இன்று பிற்பகல் சரக்கு ரோப்காரின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரோப்காரில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவகின்றனர்.

இந்த விபத்து குறித்து குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், ”பாவகத் கோயில் ரோப்வேஇல் ஒன்று பயணிகளுக்கானது, மற்றொன்று பொருட்களை கொண்டு செல்வதற்கானது. முதன்மைத் தகவல்களின்படி, கோபுரம் எண் 1 அருகே, ஆறு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு ரோப்காஅரின் கம்பி அறுந்து, முழு போகியும் கீழே விழுந்தது. அதில் பயணித்த  ஆறு தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களின் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது” மேலும் இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்படும் குழுவின் அறிக்கைகள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
corgoropwayaccidentgujratgujratpavagadhtemplelatestNewsRopeway
Advertisement
Next Article