Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:51 AM May 19, 2025 IST | Web Editor
மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் உள்ள மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. இந்த காரில் 6 பேர் பயணம் செய்த நிலையில் மும்பையில் இருந்து தேவ்ருக் நகருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஜக்புடி ஆற்றின் பாலத்தில் கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக கார் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஜக்புடி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
carcausing accidentMaraatiyamPeopleriver
Advertisement
Next Article