Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேனி | காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

11:03 AM Dec 28, 2024 IST | Web Editor
Advertisement

பெரியகுளம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் தேனி நோக்கி சென்ற காரும், தேனியில் இருந்து ஏற்காடு நோக்கி வந்த சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரில் மூன்று பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சுற்றுலா வேனில் பயணித்த 18 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளா மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AccidentcardiedhospitalPeoplePeriyakulamThenivan
Advertisement
Next Article