மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து - பெண் உயிரிழப்பு!
மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் இன்று (ஜூலை 7) அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் தம்பதியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அதில் காவேரி சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் முக்கிய தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.
“சட்டம் அனைவருக்கும் சமம், ஒவ்வொரு வழக்கையும் அரசு ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. இந்த விபத்துக்கு தனி விதி எதுவும் இருக்காது. அனைத்தும் சட்டப்படி நடக்கும். காவல்துறை யாரையும் பாதுகாக்காது. மும்பை விபத்து துரதிர்ஷ்டவசமானது. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் பேசியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.