Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

09:54 PM Dec 29, 2023 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம்  ஐமேக்ஸ் தரத்தில்  திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும்,  சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : விஜயகாந்த் இறுதிச்சடங்கு! குறையேதும் இல்லாது நடத்தி முடித்ததில் முதலமைச்சரின் பங்கு! - அரசு தரப்பில் விளக்கம்!

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  இந்த பாடலை கபேர் வாசுகி எழுத,  சீன் ரோல்டன் பாடியுள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இறுதியாக 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
#gvprakashCaptainMilIerDhanushjailerJailerboxofficeKollywoodPriyankaMohanshivarajkumarShivrajkumarTamilCinema
Advertisement
Next Article