Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேப்டன் மில்லர் - படக்குழு அறிவிப்பு!

04:53 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகளுக்காக 'கேப்டன் மில்லர்'  திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.  இயக்குனர் அருண் மாதேஸ்வரன்,  ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய  திரைப்படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது திரைப்படமான 'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன்,  சிவராஜ்குமார்,  சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தள்ளது.  இந்த திரைப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானது.  மேலும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இப்படம் தமிழ்,  தெலுங்கு,  மலையாளம், கன்னடம்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப். 9-ம் தேதி அமேசான் பிரைமில்  வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே,  உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உள்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது!

இந்நிலையில், 10வது லண்டன் தேசிய திரைப்பட விருதுகளில், ‘சிறந்த அயல் மொழித் திரைப்படம்’ என்ற பிரிவில் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

Tags :
#gvprakashARRahmanCaptain Millerd50DhanushpriyankaamohanSelvaraghavan
Advertisement
Next Article