Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என்னுடைய திரைப்படங்களில் கேப்டன் மில்லரில் தான் வன்முறை காட்சிகள் குறைவு!” - இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

10:31 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

எனது திரைப்படங்களில் கேப்டன் மில்லரில் தான் வன்முறை காட்சிகள் குறைவு என அத்திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். 

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ்  மூர்,  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாக மறைந்த நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு தனுஷ், பிரியங்கா மோகன், ஷிவ் ராஜ்குமார், சுதீப் கிஷன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், ஆங்கில பட நடிகர் எட்வர்ட், லிங்கா தனுஷ், யாத்ரா தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது:

தயாரிப்பாளருக்கு நன்றி. 2011ல் தேவதாஸ் என்று படம் எழுதினேன் அதற்கு தனுஷை தேடினேன் அது நடக்கவில்லை. ராக்கி படத்திற்கும் தனுஷை நடிக்க வைக்க நினைத்தேன் அதுவும் முடியவில்லை. எப்போதும் தனுஷ் உடன் பணியாற்ற ஆசை. அது இப்போ நடந்துவிட்டது. அடுத்தும் அவருடன் ஒரு படம் பண்றேன். அது இதைவிட பெரிய அளவில் இருக்கும். நான் என்ன கதை யோசித்தாலும் இவர்தான் முதலில் வருவார். எனது படங்கள் வெளியாவதற்கு முன்பே இப்படத்திற்கு ஓகே சொன்னார். இளம் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளவர். அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதீர் என்றார். ஜிவி பிரகாஷ் உடன் 12 ஆண்டுக்கு முன்பு படம் பண்ண வேண்டியது. அது நடக்கவில்லை. சிவராஜ் குமார் நடித்த மஃப்டி படம்‌ எனக்கு பிடித்து இருந்தது. அவரிடம் கதை சொன்னேன். அவரும் நானும் தனுஷ் ரசிகன் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் முதல் நாளே சிவராஜ் குமார் குதிரை ஓட்டும் சீன். கீழே விழுந்து விட்டார். நாங்கள் பயந்துவிட்டோம். ஆனால் அவர் எனக்கு எதுவும் இல்லை மற்றொரு டேக் எடுக்கலாம் என்றார். நான் எடுத்த படத்திலேயே குறைந்த வன்முறை காட்சிகள் உள்ளது இந்த படத்தில் தான். இவ்வாறு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறினார்.

Tags :
Arun MatheswaranCaptain MillerCaptain Miller PongalCaptain Miller Pre Release EventCinema updatesDhanushGV Prakashnews7 tamilNews7 Tamil Updatespriyanka mohan
Advertisement
Next Article