"நாங்கெல்லாம் ஜெயிக்கவே கூடாதா.."- வெளியானது ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரெய்லர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் நடித்திருந்தார். தொடர்ந்து, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
'பீனிக்ஸ்' படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இப்படம் 'பீனிக்ஸ்' படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.