Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒருமையில் பேசிய பெண் பயணி - ஆத்திரத்தில் அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநர்..!

04:42 PM Feb 04, 2024 IST | Web Editor
Advertisement

கரூரில் பெண் பயணி ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரை மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசிய நிலையில், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கல்லுப்பாளையத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து பஞ்சமாதேவி அருகே சென்று கொண்டிருந்தபோது, பயணிகள் ஏறும் முன்பே பேருந்தை இயக்கியதாக ஓட்டுநரிடம் பெண் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் ஓட்டுநரை மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநரும், அந்த பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பேருந்தை பஞ்சமாதேவி கிராமத்தின் அருகே சாலையின் நடுவே நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். இதனால், அப்பகுதியில் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இதையடுத்து அந்த வழியாக வந்த மற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்து நிற்பதை பார்த்து கல்லுப்பாளையம் பேருந்து ஓட்டுநரிடம் பேசி, சமாதானப்படுத்தி பேருந்தை இயக்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags :
Drivergovt buskarurstopped the bus halfway
Advertisement
Next Article