Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

10:17 PM Mar 27, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது.  இந்நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 – விசிக – விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் - 28) நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.  பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  இந்நிலையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு கூறியதாவது:

தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 6, 23,26,901 வாக்காளர்கள் இருப்பதாகவும் இதில்  3,06,02 367 ஆண் வாக்காளர்களும் 3,17,16,069 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்  8, 465 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,  முதல் முறை வாக்காளர்கள் 10, 90, 574 பேர் உள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 1403 ஆக உள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இரண்டாம் இடத்தில் வடசென்னை தொகுதியில் 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு கூறினார்.

Tags :
Election2024ElectionCommissionElectionCommissionersElectionDateElectionResultsElections2024LokasabhaElection2024PressMeetSathyaPradhaSahu
Advertisement
Next Article