Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

03:32 PM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இதனை இந்தியா முழுவதும் தடை செய்யலாமா? என மத்திய, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியதாவது:

“இதன் மூலம், புகையிலை பொருட்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம். இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்?

போதைப்பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் "கூல்-லிப்" எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே அதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, பள்ளி கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் ஹரியானாவின் சோனேபேட் பகுதியை சேர்ந்த தேஜ்ராம் தரம் பால் பிரைவேட் லிமிடெட், கர்நாடகாவின் தும்கூர் பகுதியை சேர்ந்த விதரத் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கர்நாடகாவின் தும்கூர் அந்தரசனஹள்ளி இண்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியை சேர்ந்த VRG புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார்.

குட்கா, புகையிலை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு செப். 20-ம் தேதி மீண்டும் இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

Tags :
gutkaMadurai HighcourtNews7TamilPan Masalaschool Students
Advertisement
Next Article