Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! அக். 8-ஆம் தேதி கூடுகிறது!

07:23 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. அதோடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் 4 புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது. 3 அமைச்சர்கள் அவர்களின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்க கூடிய நிலையில் நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags :
CMO TamilNadudeputy cmMK Stalinnews7 tamilTN CabinetTN GovtUdhayanidhi stalin
Advertisement
Next Article