Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி - பகாலா - காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல்!

திருப்பதி - பகாலா - காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
04:20 PM Apr 09, 2025 IST | Web Editor
Advertisement

திருப்பதி-பகாலா-காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. 1332 கோடி செலவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் திருப்பதி-பகாலா-காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை (104 கி.மீ) இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த முயற்சி பயண வசதியை மேம்படுத்தும், தளவாடச் செலவைக் குறைக்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் மற்றும் குறைந்த CO2 உமிழ்வை ஊக்குவிக்கும், நிலையான மற்றும் திறமையான ரயில் செயல்பாடுகளை ஆதரிக்கும்.

மேலும் இத்திட்டம் சுமார் 400 கிராமங்களுக்கும் சுமார் 14 லட்சம் மக்களுக்கும் இணைப்பை அதிகரிக்கும்.  திருப்பதிக்கு இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டம், இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 113 கி.மீ. அதிகரிக்கும்.


திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுடன் இணைப்போடு, திட்டப் பிரிவு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சந்திரகிரி கோட்டை போன்ற பிற முக்கிய இடங்களுக்கும் ரயில் இணைப்பை வழங்குகிறது. இது நாடு முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

நிலக்கரி, விவசாயப் பொருட்கள், சிமென்ட் மற்றும் பிற கனிமங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு இது ஒரு அத்தியாவசிய பாதையாகும். திறன் பெருக்கப் பணியின் மூலம் 4 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் எரிசக்தி திறன் கொண்ட போக்குவரத்து முறையாக ரயில்வே இருப்பதால், காலநிலை இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் தளவாடச் செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
Andhra PradeshkatpadiPakalarailway linetamil naduTirupati
Advertisement
Next Article