Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிக்கு #Cabinet ஒப்புதல்!

09:35 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார்.இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ 2-ஆம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.

அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார். இந்நிலையில், இன்று (03.10.2024) மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட பணியை பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு எவ்வளவு என்கிற விவரமும் வெளியாகியுள்ளது.

அதன்படி, மத்திய அரசு 7,425 கோடியும், தமிழ்நாடு அரசு 22,228 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்கின்றன. அதோடு 33,593 கோடி ரூபாய் கடன் வாயிலாக பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டம் மொத்தமாக 63.246 கோடி ரூபாய் மதிப்பிட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி; தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது மெட்ரோ 2-ஆம் கட்ட பணி விரைந்து நடக்க உதவியாக இருக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiMetro Phase2metro trainMK Stalinnews7 tamilPM Modi
Advertisement
Next Article