ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குஜராத் மாநிலத்தில் கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி காலமானதால் அவர் எம்எல்ஏ-வாக இருந்த காடி (தனித்தொகுதி) தொகுதிக்கும், அதே போல் அம்மாநிலத்தில் பயானி பூபேந்திரபாய் கந்துபாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கும், பி அன்வரின் ராஜிநாமாவிற்கு பிறகு, கேரள மாநிலத்தில் உள்ள நிலாம்பூர் தொகுதிக்கும், குர்பிரீத் பாஸி கோகி மறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதிக்கும், நசிருதீன் அகமது மறைவால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்மனுதாக்கல் வருகிற ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிந்த பிறகு, வாக்குபதிவு ஜூன் 19 ஆம் தேதி நடைறவுள்ளது. தொடர்ந்து வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.