Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

04:10 PM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். 

Advertisement

டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி (விளவங்கோடு தொகுதி) பிப். 24 ஆம் தேதி டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.  தொடர்ந்து அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார்.  இதனால், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடை பெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.  இதையடுத்து,  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்துள்ளார்.

Tags :
மக்களவைத்தேர்தல்2024ElectionCommissionElectionCommissionersElectionDateElectionResultsElections2024LokasabhaElection2024ParliamentaryElection2024RajivKumar
Advertisement
Next Article