Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது!

12:06 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி,  உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  தோ்தல் விதிகளின்படி,  ஒரு சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ,  ராஜிநாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால்,  அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதையடுத்து வரும் 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21ஆம் தேதி கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வேட்புமனுக்கள் மீது 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 26ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
By ElectionsElection commissionElection2024vikravandiVilupuram
Advertisement
Next Article