Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொலிவியாவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - 37 பேர் உயிரிழப்பு !

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
04:00 PM Mar 02, 2025 IST | Web Editor
Advertisement

பொலிவியா நாட்டில் ஆருரோ பகுதியில் பெரிய திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிலர் பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். அப்போது ஒரு பேருந்து பொடோசி என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே பேருந்து சென்ற போது எதிர்திசையில் வந்த மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

Advertisement

இது குறித்து பொடோசி காவல் துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்த கொடிய பேருந்து விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 39 பேர் உயுனி நகரின் 4 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மற்றும் சிகிச்சை பெறும் நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பொலிவியாவின் மலைப்பாங்கான, சரியான பராமரிப்பு அல்லாத மற்றும் அதிகம் கவனிக்கப்படாத சாலைகளால் சராசரியாக 1,400 பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :
AccidentBoliviaBusAccidentBusesCelebrationCollideDeadfestivalhospital admit
Advertisement
Next Article