6 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டம் காண வைத்த பும்ரா - தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!
6 விக்கெட்களை வீழ்த்தி அதிரடியாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர் பும்ரா , தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சேர்த்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை இந்திய அணி குவித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் யெசஸ்வி ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி 290 பந்துகளுக்கு 209 ரன்கள் குவித்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 396ரன்களை குவித்துள்ளது.
அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 253 ரன்களுக்கு எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அதிரடியாக பந்துவீசி 6விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 28 ரன்கள் குவித்தது ஜெய்ஸ்வால் 15, ரோஹித் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன் மூலம் இந்தியா 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.