பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை நிர்மலா சீதாராமன் 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதனால் அவர் இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இதற்கு முன்பாக மொரார்ஜி தேசாய் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்து இந்தியாவில் அதிகம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
மேலும் இவருடைய சாதனையை தற்போது முறியடித்து நிர்மலா சீதாராமன் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார்.இந்த நிலையில், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நிர்மலா சீதாராமன்.