Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராணுவப் பயிற்சிக்கு பின் ரியாலிட்டி ஷோவில் BTS ஜின்!

09:04 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

ராணுவப் பயிற்சிக்கு பின் BTS உறுப்பினர் ஜின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த  BTS. ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும்,  பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

குழுவாக பாடல்களை வெளியிட்டு வந்த  BTS குழுவினர் சமீப காலமாக தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது BTS குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறவேண்டும். அந்த வகையில் BTS குழுவினரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் தான் வெளியே வந்தார்.

தொடர்ந்து தனது துறைரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். முதலில் பிடிஎஸ் தொடங்கி 11 ஆண்டுகள் ஆனதையடுத்து கொண்டாடப்பட்ட 2024 BTS Festa என்ற விழாவில் கலந்துகொண்டார். தற்போது ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜின் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "The Half-Star Hotel in Lost Island" என்ற ரியாலிட்டி ஷோவின் 10வது எபிசோட்டில் ஜின் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரியாலிட்டி ஷோவானது MBC- சேனலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

Tags :
BTSBTS' JinJinReality ShowThe Half-Star Hotel in Lost Island
Advertisement
Next Article