மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் புதன்கிழமை இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வசிக்கும் இந்துக்களால் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் இங்கிலாந்து மட்டுமினிறி உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “இன்றிரவு பிரதமர் ரிஷி சுனக் தீபாவளிக்கு முன்னதாக இந்து சமூகத்தைச் சேர்ந்த விருந்தினர்களை வரவேற்றார். இது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.