தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர்!
08:21 PM Jun 23, 2024 IST
|
Web Editor
தொங்கு நாடாளுமன்றம் நிலவினால் நிச்சயம் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் ஆதரவு கொண்டு மட்டுமே எந்த கட்சியும் ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். கர்னல் ஜான் பென்னிகுக்கின் சொந்த ஊரும் தமிழக அரசால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுக் சிலை இருக்கின் கேம்பர்லீ எனும் நகரத்தின் தொகுதியான சர்ரே நாடாளுமன்ற தொகுதியில் ஆல் பிங்க்கர்டன் லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக நிறுத்தபட்டுள்ளார். இவர் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தனது தொகுதியில் நிறுவபட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுக்கின் சிலை முன் நின்று தமிழக மக்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கர்னல் ஜான் பென்னிகுக் சிலை நிறுவியதற்கு நன்றி கூறினார். தான் வெற்றி பெற்றால் தமிழ் சமூகத்தை பெருமைபடுத்தும் விதமாக சர்வதேச நாடுகளுடன் இங்கிலாந்தில் உள்ள நகரங்களை கலாச்சர பரிமாற்றங்களுக்காக இணைப்பது போல் சர்ரே நகரத்தை தமிழகத்தின் கலாச்சார பரிமாற்றமாக இணைத்து கவுரப்படுத்துவேன் என்று கூறினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்பு சர்ரே தமிழர்களுக்கும் மட்டுமல்லாது அனைத்து இனத்தவருக்கும் பொதுவானது அவருக்கு என் தனிபட்ட நன்றியே கூறிக்கொள்கிறேன். மேலும் வருங்காலங்களில் தமிழர்களின் கலாச்சார மையமாக கேம்பர்லீ திகழ பாடுபடுவேன் என்று ஆல் பிங்க்கர்டன் கூறினார்.
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement
இங்கிலாந்தில் வரவிருக்கின்றன நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு அரசு வழங்கிய கர்னல் ஜான் பென்னிகுக் சிலை பேசுப்பொருளாகியுள்ளது. இங்கிலாந்தில் வருகிற ஜீலை 4m தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் தற்போது ஆட்சி புரிகின்ற கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்கட்சியான லேபர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. பல தொகுதிகளில் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெறுவர்கள் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது.
தொங்கு நாடாளுமன்றம் நிலவினால் நிச்சயம் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் ஆதரவு கொண்டு மட்டுமே எந்த கட்சியும் ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். கர்னல் ஜான் பென்னிகுக்கின் சொந்த ஊரும் தமிழக அரசால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுக் சிலை இருக்கின் கேம்பர்லீ எனும் நகரத்தின் தொகுதியான சர்ரே நாடாளுமன்ற தொகுதியில் ஆல் பிங்க்கர்டன் லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக நிறுத்தபட்டுள்ளார்.
Next Article