பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு!
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். 75 வயதாகும் சார்லஸ், சமீப காலங்களில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
“நோய் கண்டறிதல் சோதனையின் மூலம் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் சார்லஸ் மேற்கொள்வார்.
சிகிச்சை முறையில் நேர்மறையான மனநிலையில் உள்ள மன்னர் சார்லஸ், விரைந்து பொதுவாழ்வுக்கு திரும்புவார். தேவையற்ற வதந்திகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும்
உள்ள அனைவருக்கும் அவர் அறிவித்துள்ளார்". இவ்வாறு பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.