Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகாரில் இடிந்து விழும் பாலங்கள்: 10 நாட்களில் இடிந்த 4-வது பாலம்!

10:18 AM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் 13 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது.

Advertisement

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பீகாரில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மீதுள்ள பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன.  இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.25லட்சம் செலவில் முதலமைச்சரின் ஊரகச் சாலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பாலம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது.  70 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்துள்ளது.  இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இது பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் இடிந்து விழுந்த 4 ஆவது பாலமாகும். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் இந்த சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
BiharBridgebridge collapsedKishanganj
Advertisement
Next Article