Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து - பிரதமர் மோடி இரங்கல்..!

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு மற்றும் பாலம் விபத்து சம்பவங்களால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
03:51 PM Oct 05, 2025 IST | Web Editor
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு மற்றும் பாலம் விபத்து சம்பவங்களால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்க் பகுதியில் நேற்று இரவு முதல கனமழை பொழிந்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு  இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மிரிக் என்ற இடத்தில் இரும்பு பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதுவரை நிலச்சரிவு மற்றும் பாலம் விபத்து ஆகிய சம்பவங்களில் சிக்கி அங்கு  14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

கனமழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க  உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்

Tags :
BridgeCollapseDarjeelinglandslidelatestNewsPMModiWestBengal
Advertisement
Next Article