Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BRICSSummit - ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

06:44 AM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யாவிற்கு புறப்படுகிறார்.

Advertisement

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாச்சார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்று மற்றும் நாளை (அக். 22, 23) நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். இம்மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா பெரும் மதிப்பைக் கொண்டு வருகிறது. பொருளாதார, நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளாவிய சவால்களை தீர்ப்பதற்கான முக்கிய சர்வதேச தளமாக திகழும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நமது ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பிரிக்ஸ் கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் பாதையை அமைக்கும் கசான் பிரகடனத்தை தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

உலக நிலப்பரப்பில் சுமார் 30% மற்றும் உலக மக்கள்தொகையில் 45% உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசார் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு” என இந்தியாவின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags :
bricsIndiaNarendra modiNews7TamilPMO IndiaputinrussiaSummit
Advertisement
Next Article