Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரிக்ஸ் உச்சி மாநாடு - ரஷ்யா செல்கிறார் #PMModi..!

06:42 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்.

Advertisement

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு 'பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த உச்சி மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

16-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 'உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், இதுவரை பிரிக்ஸ் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
BRICS SummitIndiaNarendra modinews7 tamilPM ModiPMO Indiarussia
Advertisement
Next Article